• Thu. Apr 25th, 2024

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் – சோனி பிலிம்ஸ் கூட்டறிக்கை

கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்மற்றும் சோனி பிக்சர்ஸ்பிலிம்ஸ் இந்தியா’ ஆகிய நிறுவனங்கள் முதல்முறையாக இணைந்து
திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர் டோக்கியோவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சோனி நிறுவனம் உலகம் முழுவதும் பொழுதுபோக்கு துறையில் திரைப்பட தயாரிப்பு, விநியோகம் ஆகிய இரண்டிலும் சோனி நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது
மலையாள மொழியில் பிருத்விராஜ் நடித்த
நைன் படத்தின் மூலமும், தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மேஜர் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் கால்பதித்த சோனி நிறுவனம் தமிழ் திரைப்படங்கள் தயாரிப்பதில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது அதில்குறிப்பிடப்பட்டுள்ளதாவது

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்மற்றும் ’சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க உள்ளன. இது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 51-ஆவது திரைப்படமாகும்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் புதிய தமிழ்ப் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கவுள்ளார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார்.

இப்படத்தை சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ், பன்முக நாயகன் கமல்ஹாசன், ஆர்.மகேந்திரன் மற்றும் காட்ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி, இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.

இது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 51-ஆவது திரைப்படமாகும். கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் இணைந்து நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் இந்த ஆண்டு(2022) கோடை விடுமுறையில் வெளியாகிறது. ‘விக்ரம்’ திரைப்படம் ராஜ்கமல் நிறுவனத்தின் 50-ஆவது தயாரிப்பு.இந்திய சினிமாவின் இணையற்ற நடிகரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் இந்தப் புதிய தயாரிப்பு பற்றிக் கூறுகையில், ஒரு சிறந்த திரைப்படம் ரசிகர்களிடம் தாக்கத்தை உருவாக்க வேண்டும். இந்தத் திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும். சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரிப்பதில் பெருமையடைகிறேன்” என்றார்.இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறுகையில், “சிறப்பானதும் புதுமையானதுமான கதை அம்சம் கொண்ட இந்தப் படத்தை இயக்குவதில் பெருமிதம் அடைகிறேன். நான் சிறு வயதில் இருந்தே உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகன். அவர் மீது எனக்கு தனி மரியாதை உண்டு. அவருடைய நடிப்பு மற்றும் பன்முக திறமைகளைக் கண்டு வியந்திருக்கிறேன்.இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன் அவர்கள் எனக்கு மிக நெருங்கிய நண்பர். இந்தப் படத்தை இயக்குவது என் மனதிற்குப் பிடித்த ஒன்று. மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்களான ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்…” என்றார்.
இப்படத்தின் கதாநாயகனான சிவகார்த்திகேயன் கூறுகையில், “இந்தத் திரைப்படத்தில் நடிப்பது என்பது கலவையான பலவித உணர்வுகளை எனக்கு வழங்குகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் இந்திய சினிமாவின் தலைசிறந்த கலைஞர். கலைஞானி. சர்வதேசத் திரையுலகில் தமிழ் சினிமாவின் அடையாளமாக வாழ்பவர். கலை மேதை கமல்ஹாசன் அவர்கள் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன் என்பதே எனக்குப் பெருமையாகவும் பெரும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
சர்வதேச அளவில் பல வெற்றிப் படங்களை வழங்கிய சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவதிலும் பெருத்த மகிழ்ச்சி அடைகிறேன். இவை அனைத்தும் சாத்தியமாவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் என் நண்பர், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிதான்.
அவருடைய சிறப்பான திரைக்கதையினால் இப்படம் வெற்றியடையும் என்று உறுதியாக நம்புகிறேன். என் சினிமா வாழ்க்கையில் இப்படம் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *