• Sat. Mar 25th, 2023

தங்கச்சுரங்கங்களில் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு

மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்துள்ள விக்ரம் அடுத்தபடியாக பா.ரஞ்சித் இயக்கும் தனது 61வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ள பா.ரஞ்சித், இந்த மாத இறுதியில் விக்ரம் நடிக்கும் படத்தை தொடங்குகிறார்.மேலும், சார்பட்டா பரம்பரை படத்தை வடசென்னையின் பாரம்பர்ய விளையாட்டான குத்துச் சண்டையை மையமாகக் கொண்ட கதையை இயக்கிய ரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது படத்தை காதல் கதையில் இயக்கி இருக்கிறார். இந்நிலையில், விக்ரம் நடிக்கும் படத்தை கன்னடத்தில் உருவான கேஜிஎப் படத்தைப் போன்று கோலார் தங்கச் சுரங்க பின்னணி கொண்ட கதையில் இயக்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு தங்கச் சுரங்கங்களில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *