• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வரும் 18-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை!!

Byகாயத்ரி

Sep 14, 2022

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 வானம் ஓரளவு மணிநேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. மேலும், இன்று வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.