• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வெளுத்து வாங்கபோகும் மழை…

Byகாயத்ரி

Sep 12, 2022
Rain

தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் பல பகுதிகளில் கனமழை நீடிக்கும் நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறையும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் காற்றழுத்த தாழ்வு மாற்றங்கள் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று முதல் 15ம் தேதி வரை கனமழை தொடரும் என கூறப்பட்டுள்ளது. இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.