• Sat. Nov 7th, 2026

திருப்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவன் கோவிலில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு..,

ByKalamegam Viswanathan

Nov 7, 2026

மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பால் சுனை கண்ட சிவன் கோவிலில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்தீஸ்வரர் மற்றும் சிவபெருமானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனையில் பக்தர்கள் பங்கேற்று சிவபெருமானையும் நந்தீஸ்வரரையும் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்றால் சிவபெருமானின் அருளும் நன்மைகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.