• Tue. Dec 10th, 2024

தமிழகம் வரும் ராகுல்… நடைப்பயணத்தில் ஆதிவாசிகளுடன் சந்திப்பு..!!

Byகாயத்ரி

Sep 29, 2022

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 1,500 கிலோ மீட்டர் கொண்ட இந்திய ஒற்றுமை பயணம் என்ற நடை பயணத்தை ஆரம்பித்தார்.

கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆரம்பித்து வைத்த இந்த ஒற்றுமை பயணம் பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது என்பதும் தற்போது அவர் கேரளாவில் நடை பயணம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆரம்பித்த நடைப்பயணம் இன்று மீண்டும் தமிழகத்திற்கு வர உள்ளது. கேரளாவில் உள்ள நிலம்பூர் வழியாக நீலகிரி கூடலூர் ஆகிய தமிழக பகுதிகளுக்கு ராகுல்காந்தி வருகிறார் என்றும் அங்கு உள்ள ஆதிவாசி இன மக்களை சந்தித்து உரையாட உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.