• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

வசூல் மழையில் ஆர்.ஆர்.ஆர்.!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் நடித்துள்ளார்கள். டிவிவி நிறுவனம் இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 25-ஆம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், இந்த திரைப்படம் உலகம் முழுவது வசூல் செய்த விவரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படம் உலகம் முழுவது 600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. வரும் விடுமுறை நாட்களில் இந்த படம் இன்னும் அதிகமாக வரவேற்பை பெற்று வசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.