ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 திரைப்படத்தோட அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகிட்டு வரும் வேளையில, இப்படத்தில் இணைய போகுற நடிகர்கள் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கு. வர்ற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்ப தொடங்க படக்குழு திட்டமிட்டிருக்காம்!
ஷூட்டிங்க படுவேகமா முடிச்சிட்டு அடுத்த வருஷம் பொங்கலுக்கு படத்த திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதா கூறப்படுது! தலைவர் 169 குறித்த அப்பேட்டுகள் அப்பப்போ சோஷியல் மீடியாவுல கசிஞ்சிட்டு வரும் நேரத்தில, சிவகார்த்திகேயன் இந்த படத்துல, சிறப்புத் தோற்றத்தில நடிக்க இருப்பதாவும், ஐஸ்வர்யா ராய் முதன்மை கதாபாத்திரத்துலயும், பிரியங்கா மோகன் ரஜினியின் மகளா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுது.
மேலும் இந்த படத்துல, நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால, இந்த படத்துல வைகை புயல் வடிவேலு நடிக்க உள்ளதாவும் பேச்சுவார்த்தை நடந்துட்டு வருதாம் படக்குழு. படத்தோட நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்ப படக்குழு விரைவில வெளியிடும்-ன்னு எதிர்பார்க்கப்படுது.