• Sat. Apr 27th, 2024

மீண்டும் இணையும் எஸ்.கே – சமந்தா ஜோடி!

சிவகார்திகேயன் நடிப்பில் டான்,அயலான் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. இதில் டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படங்களை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சமந்தா தனக்கு ஜோடியாக நன்றாக இருக்கும் என சிவகார்த்திகேயன் நினைத்துள்ளாராம்.. இதனால் சமந்தாவிற்கு கால் செய்து இப்படி ஒரு படம் இருக்கு நீங்கள் நடிக்கிறீங்களா என கேட்டுள்ளார். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டுவிட்டாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *