• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் – அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து…

Byமதி

Oct 30, 2021

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் தற்போது பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த காலிறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து தாய்லாந்தின் பூசனனை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்தின் பூசனனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த தொடரில் இந்திய தரப்பில் பி.வி.சிந்து மட்டுமே களத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.