

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு தொடர்ந்து மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களை அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இதுவரை 6 முறை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு நடத்தியுள்ளது. இருப்பினும் இன்னும் முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசி போடவேண்டிய பொதுமக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அனைவரும் தடுப்பூசி செலுத்தியே ஆக வேண்டும் என்ற நோக்கில் இன்று 7வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.
7-வது தடுப்பூசி மெகா முகாம்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது. இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 69 சதவீதம் பேர். 2-வது தவணை தடுப்பூசியை 29 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டுள்ளனர்.
தற்போது 44 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
