• Fri. Sep 29th, 2023

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை…

Byகுமார்

Oct 30, 2021

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர் நாகரீகம் குறித்த அகழாய்வு பணிகள் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை பார்வையிட்ட முதலமைச்சர், அதன் தொன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனையடுத்து மதுரை குருவிக்காரன் சாலை பால பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை நத்தம் சாலையில் பொதுப்பணித்துறை சார்பில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.

இந்த நிலையில், பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் 114 குருபூஜை விழா இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, பின்னர் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் ஆகியோர் இருந்தனர். இதனை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *