• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ‘புஷ்பா 2’ ரிலீஸ்

ByP.Kavitha Kumar

Jan 28, 2025

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியாகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘புஷ்பா தி ரைஸ்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, பிரம்மாண்ட பொருட்செலவில் ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் உருவானது. இதில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் ஃபான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி வெளியானது. இப்படம் வெளியான முதல்நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது, இந்திய சினிமாவில் முதல் நாள் இப்படத்தின் வசூலே அதிகமாகும். மேலும் இத்திரைப்படம் வெளியான 32 நாட்களில் ரூ. 1831 கோடியை வசூல் செய்தது.

‘புஷ்பா 2’ படத்தின் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் ‘புஷ்பா 2’ ரீலோடட் வெர்ஷன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ஜனவரி 30-ம் தேதி ‘புஷ்பா 2’ வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.