• Tue. Feb 18th, 2025

ரூ.‌10 கோடி நஷ்டஈடு கேட்ட நடிகர் தனுஷ்… நெட்ஃபிளிக்ஸ் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

ByP.Kavitha Kumar

Jan 28, 2025

நெட்ஃப்ளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வொண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு பிப்ரவரி 5-ல் விசாரணைக்கு வரவுள்ளது.

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ்சிவன் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே நிராகரிக்க வேண்டும் என்று நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதன் பிறகு நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த பிரதான உரிமையியல் வழக்கை பிப்ரவரி 5-ம் தேதி பட்டியல் இடவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார்.