

தமிழகத்தில் சிறு குறு தொழில் துறையினர் அதிகளவில் சந்தித்து வருகின்ற பீக்ஹவர் கட்டணத்தை – நீக்கிடும் வகையில் புயூர் பவர் நிறுவனம் கமர்ஷியல் தயாரிப்புகள் முலமாக அதிக மின்சாரத்தை பயண்படுத்தும் பேட்டரி கருவிகளை கண்டுபிடித்துள்ளது..!

தமிழகத்திலும் கேரளாவிலும் வீடு மற்றும் வணிக மின் தேவைகளுக்கான அதிநவீன மின் சேகரிப்பு தயாரிப்புகளை கோவையில் அறிமுகப்படுத்தியது ப்யூர் நிறுவனம்..! மின்சாரத்தை சேகரித்து வைக்கக்கூடிய தயாரிப்புகளை உருவாக்கும் ஹைதராபாத் ப்யூர் நிறுவனம் – கோவையில் தடம் பதித்துள்ளது..!

வீடு மற்றும் வணிக ரீதியிலான மின்சார தேவைகளுக்கான அதிநவீன மின் சேகரிப்புகளை தயாரிக்கும் ப்யூர் பவர் நிறுவனம் தங்களது புதிய புதிய கண்டுபிடிப்புகளை கோவையில் அறிமுகம் செய்தது.
ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் பியூர் பவர்.. இந்த நிறுவனமானது மின்சார இரு சக்கர வாகனங்கள், மற்றும் அதற்கான நவீன பேட்டரிகளை தயார் செய்து வருகின்றது.
தற்போது இந்த நிறுவனம் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான அதிநவீன மின் சேகரிப்பு பேட்டரிகளை கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் உணவக அரங்கில் அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ப்யூர் பவர் நிறுவனத்தின் நிறுவனர், டாக்டர் நிஷாந்த் டோங்கரி கூறியதாவது.
தமிழகத்தில் சிறு குறு தொழில் துறையினர் அதிகளவில் சந்தித்து வருகின்ற பீக்ஹவர் கட்டணத்தை, நீக்கிடும் வகையில் புயூர் பவர் நிறுவனம் கமர்ஷியல் தயாரிப்புகள் முலமாக அதிக மின்சாரத்தை பயண்படுத்தும் பேட்டரி கருவிகளை கண்டுபிடித்துள்ளது.
இவ்வகை பேட்டரி கருவிகள் எந்த வித இடைநிற்றல் இல்லா மின்சாரத்தை வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பீக் ஹவர் கட்டணத்தை பெருமளவு குறைத்திட முடியும் என்றார்.
மேலும் 100 சதவிகிதம் தடையின்றி இயங்குவதை உறுதி செய்வதாகவும், இதில் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பொருத்தபட்டுள்ளது என்றார்.
மேலும் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பதை இந்த செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் முன்பாக அறிய முடியும் என கூறியவர், இக்கருவி ஒரு தொழில் நிறுவனத்தில் உள்ள மின்சாரம், டீசல் ஜெனரேட்டர்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்ட கட்டமைப்புகள் அனைத்துடனும் தானாக இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கபடும் இவ்வகை தயாரிப்புகள், மின்கட்டண சேமிப்பை வழங்குவதால், இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை இலக்குகளில் முக்கிய பங்காற்றும் வகையில் வடிவமைக்கபட்டுள்ள புதுமை கண்டுபிடிப்பு என்று தெரிவித்தார்.
மேலும் தற்போது தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி இல்லங்களுக்கு தேவையான மின் சேகரிப்பு தயாரிப்புகளை ப்யூர் பவர் ஹோம் எனும் பெயரில் உருவாக்கிஉள்ளதாக தெரிவித்தார்.

