கோவை மாவட்டம் சூலூர் அருகே விவசாயியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்று சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூலூர் அருகே உள்ள சுல்தான் பேட்டை ஒன்றியம் பூரண்டாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதியப்பன் .

இவருக்கு திருமணம் ஆகி தேவி என்கின்ற மனைவியும் ஒரு வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளன.ர் கணபதியப்பனின் தந்தை சமீபத்தில் நடந்த விபத்தில் மரணம் அடைந்துள்ளார். இது தொடர்பான வழக்கு சம்பந்தமாக கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில் தேவி மற்றும் அவரது குழந்தைகள் வீட்டில் தனியாக இருந்துள்ளனர் .குழந்தைகள் தூங்கும் நேரத்தில் தேவி அருகில் உள்ள மணி என்பவர் தோட்டத்து வழியாக கணபதி அப்பன் தோட்டத்திற்கு சென்று பார்த்துவிட்டு வீடு திரும்பி உள்ளார்.

இதை பார்த்த மணி மற்றும் அவரது மகன் ராஜ கணேஷ் ஆகியோர் தேவியை எதற்காக எங்க தோட்டத்து வழியாக செல்கிறாய் என திட்டி உள்ளனர் .மாலை வீடு திரும்பிய கணபதி அப்பனிடம் நடந்த சம்பவத்தை தேவி கூறியுள்ளார். அதை தொடர்ந்து கணபதி அப்பன் மணி அவர்கள் தோட்டத்திற்கு சென்று அவர் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வீடு திரும்பி உள்ளார். இந்நிலையில் இரவு 8 மணி அளவில் போதையில் மணி இரண்டு அடியார்களுடன் கையில் மண்வெட்டியுடன் கணபதி அப்பன் வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது அவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார்.
அருகில் இருந்த கட்டை மற்றும் கற்களை எடுத்து கணபதி அப்பன் வீட்டை அடித்து உடைத்து உள்ளனர். இதில் கணபதி அப்பன் பயந்து போய் வீட்டிற்குள் சென்று தாழிட்டுக் கொண்டார். அதைத்தொடர்ந்து இரவு 10 மணியளவில் ராஜ் கணேஷ் ஐந்து லிட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி வந்து மின்சார இணைப்பு இருந்த இடத்தை தீயிட்டு கொளுத்தி விட்டு வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி உள்ளார். கணபதி அப்பன் இந்த காரை கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பாக தான் புதிதாக 10 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார்.

இது தொடர்பாக கணபதியப்பன் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் .விவசாயி ஒருவரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்று வீட்டில் இருந்த காரை எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.




