• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சிவகாசி சிவன் கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ விழா..!

Byவிஷா

Oct 13, 2023

சிவகாசி பகுதியிலுள்ள சிவன் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷ விழா, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்று பகுதிகளிலுள்ள சிவன் ஆலயங்களில் புரட்டாசி மாத பிரதோஷ விழா அதிவிமர்ச்சியாக நடைப் பெற்றன. சிவன் ஆலயத்திலுள்ள நந்தி பகவானுக்கு பக்தர்கள் கொண்டு வந்த காணிக்கை பொருளான பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் மற்றும் வாசன திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் நந்தி பகவானுக்கு சந்தன காப்பு அணிந்து தாமரை, அரளி, செவ்வந்தி போன்ற மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன.
புரட்டாசி மாத பிரோஷம் என்பதால் சிவகாசி மற்றும் சுற்றுப்புறப் பகுதியை சேர்ந்த ஏராளமான சிவன் பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டன.