• Mon. May 6th, 2024

இராஜபாளையம் அருகே மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் தேரோட்டம்…

ByKalamegam Viswanathan

Oct 13, 2023

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் புரட்டாசி பொங்கல் தேர் திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினசரி மாலையில் மாரியம்மன் ரிஷப, சிம்மவாகனம், தண்டியல், மற்றும் பூ பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து தேரோட்ட விழாவை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர் போன்ற 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன் பின் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின்னர் ஏ.கே.ஆர் குழும தலைவர் காமராஜ் மற்றும் குடும்பத்தினர் திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தேருக்கு பின்னால் விழுந்து வழிபாடு செய்து தங்களுடைய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *