• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மறைந்தும் உயிர் வாழும் புனித் ராஜ்குமார்

Byமதி

Nov 2, 2021

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்கள் மூலமாக நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.

தனது பெற்றோரைப் போலவே புனித் ராஜ்குமாரும் தனது கண்களைத் தானம் செய்திருந்தார். புனித்தின் கண்களை தானமாகப் பெற்ற மருத்துவர்கள், அதன் மூலம் நான்கு பேருக்கு பார்வை கிடைக்க வழி செய்துள்ளனர்.

விழிப்படத்தின் முன்பகுதி, பின்பகுதியை தனித்தனியாக பிரித்து நவீன தொழில்நுட்பம் மூலமாக அறுவை சிகிச்சை செய்து நால்வருக்கு பொருத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த இளம் வயதினர் இதன் மூலம் பயனடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புனித் இந்த உலகை விட்டுசென்றாலும் அவர் பிற மூலம் இன்னும் இந்த உலகை பார்த்துக் கொண்டே உள்ளார் என்பதே உண்மை.