புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புதுகை வெற்றி ரோட்டரி சங்கம் இணைந்து புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் தலைமை ஆசிரியர் R.சிவசக்திவேல் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் பட்டதாரி ஆசிரியர் H.மீனாட்சி சுந்தரம் வரவேற்றார் புதுகை வெற்றி ரோட்டரி சங்க தலைவர் முனைவர் A.சோமசுந்தரம் ரோட்டரி பிரார்த்தனை வாசித்தார்.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் S.அப்துல் ரகுமான் என்ற சேட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைத்து ஆசிரியர்களையும் கௌரவித்து பரிசு பொருள்கள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் சங்க மேனாள் தலைவர் R.சிவக்குமார், மூத்த உறுப்பினர் T.தயாளன், புதுகை வெற்றி ரோட்டரி சங்க செயலாளர் பொறியாளர் SM.அண்ணாமலை முன்னிலை வகித்தனர். நிறைவாக செயலாளர் K.மணிகண்டன் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொருளாளர் கண.மோகன் ராஜா செய்திருந்தார்.









