புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தும் 17 வகையான பிளாஸ்டிக்கிற்கு புதுச்சேரி அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், தண்ணீர் பாக்கெட்டுகள், சாப்பாட்டு மேஜையில் பயன்படுத்தப்படும், உணவுகளை பொட்டலம் போட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பேப்பர்கள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட பலூன்கள், பிளாஸ்டிக் குச்சி கொண்ட மிட்டாய்கள், ஐஸ்கிரீம்கள், தர்மாகோல் அலங்காரம், பிளாஸ்டிக் காது குடைப்பான் குச்சிகள், 100 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பேனர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு மாநிலம் முழுவதும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.