


கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை பேருந்து நிலையத்தில் கரூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஹிந்தி திணிப்பு,தொகுதி மறு சீரமைப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டி வரும் ஒன்றிய அரசனை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மூத்த ஊடகவியலாளர் செந்தில்வேல் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன சிறப்புரையாற்றினார்.


அப்போது அமைச்சர் பேசுகையில் தமிழ்நாட்டு ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்துள்ளதாகவும், மகளிர் காண விடியல் பயணம், இன்னுயிர் காப்போம் 48, மக்களை தேடி மருத்துவம் முன்னேற்ற பல்வேறு சிறப்பு திட்டங்களை தீட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேர்தல் சமயத்தில் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமட்டு முதல் கையெழுத்தாக கொரோனா காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 பணம், மகளிர் காண விடியல் பயணம் முடித்தவர்கள் கையெழுத்திட்டதாகவும், இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் மாணவ மாணவிகளின் கல்வித்திறன் மேம்பாட்டிற்காக ரூபாய் 46 ஆயிரம் கோடி நிதியினை ஒரு துறைக்காக அதிகபட்சமாக ஓதுக்கி உள்ளதாகவும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்கள் அதிகளவில் உழைத்து 200 இடங்களுக்கு மேல் திமுக வெற்றி பெற்ற மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்க உறுதுணையாக நிற்போம் என்றும் கூறினார்.

