• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலம் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் பாதிப்பு..,

ByS.Ariyanayagam

Aug 10, 2026

திண்டுக்கல் பாலகிருஷ்ணா புரத்தில் மேம்பாலம் அடியில் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலத்திற்கு கீழே திருச்சி ரயில்வே லைனில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்க பாதையில் ஊற்று ஏற்பட்டு தண்ணீர் தேங்கி இருப்பதால் இவற்றை எடுக்காமல் நெஞ்சாலைத்துறை காலம் தாமதிக்கிறது. இதனால் மேம்பாலம் கீழ்பகுதியில் இருக்கும் கோவிந்தராஜ் நகர், ஸ்ரீநகர், வரதராஜ நகர், களத்துக்கொட்டம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் பள்ளி மாணவ ,மாணவிகள், அலுவலர்கள், ஆசிரியர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி மீண்டும் மேம்பாலத்தை அடைய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இங்கு தேங்கும் தண்ணீரை அடிக்கடி நெடுஞ்சாலை துறையினர் எடுத்து வந்தனர். கடந்த சில நாட்களாக அவர்கள் கவனிப்பின்றி இருப்பதால், தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளும் இந்த அவலத்தை கண்டு கொள்ளவில்லை.

இணைப்புச் சாலை இல்லாததால் போக்குவரத்துக்கு மிகுந்த சிரமமாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நடக்கும் இந்த பணியாள் பொதுமக்களுடன் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.