திண்டுக்கல் அரசு ஊழியர் சங்க பிச்சாண்டி மகாலில் தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநிலத் தலைவர் பால்ராஜ் மாநில பொதுச் செயலாளர் குமரிசெல்வன் மாநில பொருளாளர் ராமசாமி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர் பால்ராஜ் செய்தியாளர்களிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் தேர்தல் வாக்குறுதி 236 இன் படி நியாய விலை கடைக்கு தனி துறை ஏற்படுத்தி அதனை கண்காணிக்க ஐஏஎஸ் ஒருவர் நியமிக்கப்படுவார் என தெரிவித்திருந்தார். ஆனால் அதை செயல்படுத்தவில்லை.
அதேபோல ரேஷன் கடைகளுக்குகொடுக்கப்பட்டுள்ள கைரேகை வைக்கும்POS மெஷின்களை சப்ளை செய்துள்ள தனியார் நிறுவனம் தரம் இல்லாத மெஷின்களை கொடுத்துள்ளதால் கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேன் செய்வதுபொதுமக்களுக்கு பொருட்களை விநியோகம் செய்வதற்கு மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே அந்தத் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதேபோல ரேஷன் கடைகளில் தரம் இல்லாத பொருட்களை கூட்டுறவுத்துறை விநியோகம் செய்கிறது கூட்டுறவுத்துறை தரம் இல்லாத பொருட்களை கொடுத்துஅதனை பொதுமக்களிடம் விற்பனை செய்யவும் கட்டாயப்படுத்துகிறது.
இதன் மூலம் அதிகாரிகள் கொள்ளையடித்து வருகிறார்கள்.தனியார் நிறுவனங்கள் தரம் இல்லாத பொருட்களை நியாய விலை கடைகளுக்கு சப்ளை செய்வதற்கு அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுக்கப்படுகிறது.அதேபோல தமிழக அரசு கொண்டுவந்துள்ள தாயுமானவர் திட்டத்தினால் அதிக அளவு முறைகேடு நடைபெற்று வருகிறது ஏற்கனவே வயதான ஒருவர் வீட்டில் இருக்கும் பொழுது அதே குடும்பத்தைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர் மூலம் ரேஷன் பொருட்களை முறையாக சப்ளை செய்து வருகிறோம் எனவே தாயுமானவர் திட்டம் எங்களுக்கு தேவையில்லை. ஆதரவற்ற மக்களுக்கு ஏற்கனவே நாங்களாகவே தேடிச்சென்று பொருட்களை வழங்கி வருகிறோம்.

கூட்டுறவு துறைக்கும் பொது விநியோகத் திட்டத்தை செயல்படும் நாயே விலை கடைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை ஆனால் தணிக்கை செய்கிறோம் என்கிற பெயரில் எங்களை கூட்டுறவு துறை அதிகாரிகள் வஞ்சித்து வருகிறார்கள் இதை அனைத்தையும் கலைய பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறையை ஏற்படுத்தி ஒரு ஐஏஎஸ் அதிகாரி இதனை கண்காணிக்க வேண்டும்ரேஷன் கடை பணியாளர்களுக்கு முறையான ஊதியம் இல்லை சம்பள உயர்வு இல்லை சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை எங்களிடம் கண்துடைப்பிற்காகவே நடைபெற்று வருகிறதுகொரோனா காலத்தில் உயிரை துச்சமாக நினைத்து நாங்கள் பணி செய்தோம் அப்பொழுது ரேஷன் கடை ஊழியர்கள் கொரோனா பாதிப்பினால் இறந்தார்கள்.
ஆனால் அரசு அதை சந்தேக மரணம் எனக் கூறி அவர்கள் குடும்பத்திற்கு சேர வேண்டிய எதையும் கொடுக்கவில்லை இன்றளவும் எங்களை தமிழக அரசு அடிமைகள் போலவே நடத்துகிறது இதனைக் கண்டித்து அனைத்து தொழிற் சங்கங்களையும் இணைத்து பெரிய போராட்டத்தை நடத்த உள்ளோம். -என தெரிவித்தார்.










