• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அம்பேத்கர் உருவப்படத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை..,

ByS.Ariyanayagam

Apr 14, 2026

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 136- பிறந்தநாளையொட்டி, இன்று செவ்வாய்க்கிழமை, திண்டுக்கல்லில் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். திண்டுக்கல்லில் நேற்று அவர் பிரச்சாரம் செய்தார். பின்பு திண்டுக்கல்லில் தங்கினார்.

அவர் தங்கி உள்ள தனியார் ஓட்டலில் அம்பேத்கர் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தினார். இன்று மாலை தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.