மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளது இதில் ஒரு சில ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் இல்லாத நிலையில் அருகில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் கூடுதலாக பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் பல்வேறு ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஊராட்சியில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலாளர்கள் உள்ளனர் தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஊராட்சி செயலாளர்கள் இல்லாத பகுதிகளுக்கு ஊராட்சி செயலாளர்களை நியமிக்கவும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஊராட்சியில் பணிபுரிந்து வருபவர்களை வேறு ஊராட்சிகளுக்கு இடமாற்றம் செய்யவும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 ஆண்டுகளாக ஒரே ஊராட்சியில் பணிபுரிந்து வருவதால் நூறு நாள் வேலை பணி திட்டம் மற்றும் ஊராட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறும் பொதுமக்கள் முறைகேடுகளை தடுக்கும் நடவடிக்கையாக பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக வாடிப்பட்டி ஒன்றியம் திருவேடகம் ஊராட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலாளரால் ஊராட்சியின் பல்வேறு பணிகள் பாதிக்கப்படுவதாக கூறும் சமூக ஆர்வலர்கள் இதேபோன்று பல்வேறு ஊராட்சிகளில் ஊராட்சியின் பணிகளில் தாமதம் ஏற்படுவதாகவும் ஊராட்சியின் பணிகள் தாமதம் இன்றி நடைபெற பத்து ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வருகின்ற திங்கட்கிழமை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்க உள்ளதாக கருப்பட்டி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்
லட்சர்கான் கூறியுள்ளார்.




