• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவை இஸ்கான் கோவிலில் செப்டம்பர் 3 முதல் 5-ம் தேதி வரை ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா..,

BySeenu

Sep 3, 2026

கோவை செப்டம்பர் 3 முதல் 5 வரை ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியை கோயம்புத்தூர் இஸ்கான் கோலாகலமாக கொண்டாட உள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில், சாதி, மதம், சமூகம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து கோடிக்கணக்கான மக்களால் மிகுந்த பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநட்சத்திர அவதார தினமான ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி, கோயம்புத்தூர் CODISSIA வளாகம் அருகே அமைந்துள்ள இஸ்கான் கோயம்புத்தூர் – ஸ்ரீ ஜகந்நாதர் (ஹரே கிருஷ்ணா) கோயிலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.

இந்த ஆண்டு மூன்று நாள் கொண்டாட்டங்கள் செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெற உள்ளது முக்கியமான ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 4, 2026 அன்று நடைபெறும். இஸ்கானின் மூத்த தலைவரான பக்தி விநோத ஸ்வாமி மகாராஜ் வழிகாட்டுதலின் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் மாபெரும் 1,008 கலச அபிஷேகம் முக்கிய சிறப்பம்சமாக இருக்க போகிறது.

இந்த ஆண்டின் ஜன்மாஷ்டமி கொண்டாட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக, செப்டம்பர் 4 அன்று மாலை 7:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறவுள்ள திருவுருவ மூர்த்திகளுக்கான மாபெரும் அபிஷேகம் அமையும். மேலும் பாரம்பரிய வேத சடங்குகள், பக்திப் பாடல்கள் மற்றும் பகவானின் திருநாமங்களின் கூட்டு சங்கீர்த்தனம் ஆகியவற்றுடன் அபிஷேகம் நடைபெறும். இந்த அற்புதமான நிகழ்வைக் காண 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் அமர்ந்து பங்கேற்கும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள், குடும்பங்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் செப்டம்பர் 3 முதல் 5, 2026 வரை நடைபெறும் மூன்று நாள் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்களில் பங்கேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.