

உத்ரா அறக்கட்டளை மற்றும் சமூக சேவகர் மானகிரி ஏ.எஸ் மன்னாதி மன்னன் சார்பில் ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், குழந்தைகள் இல்லத்தில் அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.
இந்தியத் திருநாட்டின் 73-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு உத்ரா அறக்கட்டளை மற்றும் சமூக சேவகர் மானகிரி ஏ.எஸ் மன்னாதி மன்னன் சார்பாகவும், அண்ணாநகர் வைகை காலனியில் ஏழை-எளிய மக்கள் 60க்கும் மேற்பட்டோருக்குஅரிசி, காய்கறிகளை உத்ரா அறக்கட்டளையின் நிறுவனரும், திரைப்பட இயக்குனருமான ஹரி உத்ரா வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு ஶ்ரீ மந்த்ராலயம் குருகுலம் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் புவனா சரவணன் முன்னிலை வகித்தார்.







பின்னர் காந்தி மியூசியம் அருகே சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் உள்ள 60 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருமதி தேவிகா மன்னாதி மன்னன், கார்த்திகேயன், நாகமணி ரிஷி மற்றும் திரைப்பட நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், மரகதவள்ளி மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.