• Sat. Apr 27th, 2024

மாணவி தற்கொலை விவகாரம்! குழு அமைப்பு – ஜேபி நட்டா அறிவிப்பு!

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை குறித்து நேரில் விசாரணை நடத்த மத்திய பிரதேச எம்.பி சந்தியா ராய் உட்பட 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது தேசிய பா.ஜ.க.

தஞ்சாவூரில் பள்ளி ஒன்றின் விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி சில நாட்களுக்கு முன்பு பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்த மாணவியை, பள்ளி ஆசிரியர்கள் சிலர் மத மாற கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த மாணவி தற்கொலை விவகாரத்தில் ஹாஸ்டல் வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து தீவிரமாக கருத்து தெரிவித்து வருகிறார். பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டமும் நடத்தப்பட்டது.

மேலும், மாணவியை மதம் மாற கூறி வற்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பாஜகவினர் தஞ்சை மாவட்ட எஸ்பி ரவளி பிரியாவிடம் புகார் மனு அளித்திருந்தனர். மாணவியை மத மாற்றம் செய்ய சொல்லி பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் முன்பே புகார் அளித்து இருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தீவிரம்காட்டி வரும் நிலையில், தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை குறித்து நேரில் விசாரணை நடத்த மத்திய பிரதேச எம்.பி சந்தியா ராய் உட்பட 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது தேசிய பா.ஜ.க. இந்த குழுவில் மத்திய பிரதேசம் சந்தியா ரே, எம்.பி, தெலுங்கானா விஜயசாந்தி, மகாராஷ்டிரா சித்ரா தை வாக் மற்றும் கர்நாடகா கீதா விவேகானந்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவை அமைத்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *