


தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் செயல்பட்டு வரும் பிரின்ஸ் நர்சரி பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பள்ளி மூடப்படும் என பெற்றோர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததால் பெற்றோர்கள் பள்ளியில் வந்து கண்ணீர் மல்க அழுதப்படி மூட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் பிரின்ஸ் நர்சரி என்ற பெயரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளியில் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பெற்றோர்கள் செல்போனுக்கு இன்னும் சில மாதங்களில் பள்ளி மூடப்படும் என குறுஞ்செய்தி வந்துள்ளது .
இதனை பார்த்த பெற்றோர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் தொலைபேசியில் கேட்டபோது பள்ளியை நடத்தும் தாளாளர் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த ஆண்டு முதல் பள்ளி மூடப்படும் என தெரிவித்துள்ளனர்.
பள்ளி நிர்வாகம் தெரிவித்த தகவலை கேட்டு அனைத்து பெற்றோர்களும் ஒன்று சேர்ந்து பள்ளியை முற்றுகையிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பள்ளி தாளாளர் இடம் பேசிய போது எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பள்ளியை நான் நடத்த முடியவில்லை. இந்த தகவலை அனைத்து பெற்றோருக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளேன்.
அடுத்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கையின் போது அனைவரையும் வேறு பள்ளிகளில் சேர்க்குமாறு ஏற்கனவே தகவல் தெரிவித்துவிட்டேன்.

