• Sun. Mar 16th, 2025

சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்..,

ByK Kaliraj

Mar 14, 2025

மோசமான சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளவெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, காக்கிவாடன்பட்டி முதல் துரைசாமிபுரம், அம்மாபட்டி முதல் துரைச்சாமிபுரம், மம்சாபுரம் முதல் துரைசாமிபுரம் ஆகிய சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக பல ஆண்டுகளாக உள்ளது. மேற்படி சாலைகளால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தினசரி விபத்துக்குள்ளாகின்றனர். கனரக வாகனங்கள் செல்லவே முடியாத நிலையில் மோசமாக உள்ளது. இச்சாலைகளை சரி செய்ய வலியுறுத்தி அரசு அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியும் உரிய நடவடிக்கை இல்லை.

எனவே மேற்படி சாலைகளை தரமான, கனரக வாகனங்கள் செல்லும்படியான சாலையாக சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் M. துரைசாமிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாரிமுத்து என்ற சேட்டு தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் பால்சாமி, துரைச்சாமிபுரம் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து ஒன்றிய செயலாளர் கண்ணன் பேசினார். கோரிக்கைகளை விளக்கி ஒன்றிய குழு உறுப்பினர் சர்க்கரை மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், ஒன்றிய குழு உறுப்பினர் நட்டார் மற்றும் தொடர்ச்சியான கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

சாலைகளை சீரமைக்க அரசு நிர்வாகம் காலதாமதப்படுத்தினால் ஏப்ரல் இரண்டாவது வாரம் மக்களை திரட்டி மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.