இராஜபாளையம் டிபி மில்ஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய நிலையில் சாலையில் பெரிய அளவிற்கு குண்டும் குழியுமாய் உள்ளன.
உடனடியாக நகராட்சி நிர்வாகம் சாலையை செப்பனிட வேண்டும் மேலும் நகர் முழுவதும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முழுமையாக முடிக்கவும் பள்ளிகள் அலுவலகங்கள் அதிகம் உள்ள ரயில்வே பீடர் சாலையை புதிதாக அமைத்துக் கொடுக்கவும் மலையடிப்பட்டி சாலையை உடனடியாக செப்பனிடவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராஜபாளையம் நகர்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நகராட்சி அலுவலகம் முன்பு நகர செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி பேசினர் நிறைவு செய்து கட்சியின் மாவட்ட செயலாளர் குருசாமி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மூத்த தோழர் கணேசன் நகர்குழு உறுப்பினர்கள் முருகானந்தம் கண்ணன் மேரி பிரசாந்த் மைதிலி செந்தமிழ் செல்வன் முனியாண்டி மற்றும் கட்சி கிளைச் செயலாளர்கள் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.