• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இலங்கையில் மீண்டும் போராட்டம்

ByA.Tamilselvan

Jul 5, 2022

பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாவிட்டால் ரணில்விக்ரமசிங்கே பதவி விலகுமாறு இலங்கையில் மீண்டும் போராட்டம்.
இலங்கையில் கடந்த சிலமாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவருகிறது. அங்கு பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ராஜபக்சே குடும்பத்தினர் அரசு பதவிகளில் இருந்து விலக கோரி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாவிட்டால் பதவி விலகுமாறு பிரதமர் ரணில் விக்மரசிங்கே வீட்டு முன்பு மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, இலங்கை பிரதமர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.