• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

இலங்கையில் மீண்டும் போராட்டம் பரபரப்பு வீடியோ

ByA.Tamilselvan

Jul 9, 2022

இலங்கையில் மிண்டும் போராட்டம் துவங்கியுள்ள நிலையில் போராட்ட காட்சிகள் வெளியாகிஉள்ளன.
கடந்த சில தினங்களாக சற்றே தனிந்திருந்த இலங்கை போராட்டம் மீண்டும் வெடித்திருக்கிறது. கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி ஏற்கனவே போராட்டம் நடந்தது. இந்நிலையில் மகிந்தா ராஜபக்சே பதவி விலகினார். அருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றார். இந் நிலையில் சற்றே தனிந்திருந்தது போராட்டம். ஆனால் கடந்த வாரம் இலங்கை பொருளாதார நெருக்கடி தீர இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என ரணில் அறிவித்தார்.

மேலும் கடந்த சில வாரங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அத்தியாவசிபொருட்கள் விலை மேலும்மேலும் அதிகரித்துவருகிறது. சில கடைகளில் பொருட்கள் இல்லைஎன்றசூழல் நிலவுகிறது. பலர் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும்,இல்லையானல் பதவி விலக வேண்டும் என மக்கள் கோத்தபய ராஜபக்சே,ரணில்விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி வருகின்றனர்.