ராமநாதபுரத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பினருக்கிடையே அடிதடி .
ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக நகர் கழகம் சார்பில் ஒற்றைத் தலைமை குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என மொத்தமாக சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது, ஆலோசனைக் கூட்டத்தில் ஈபிஎஸ் தரப்பினர் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கைகலப்பாக மாறி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
நாளை மறுதினம் பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் பல மாவட்டங்களில் இருதரப்பினரிடையே அடிதடி ரகளை என வன்முறை நடைபெற்றுவருகிறது. ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம்பொதுக்குழு நடைபெறும் சில நிமிடங்களுக்கு முன்பே வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இருதரப்பு மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.