• Fri. Apr 19th, 2024

இலங்கை மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி… வெடிக்கும் போராட்டம்..

Byகாயத்ரி

Jul 9, 2022

பொருளாதார நெருக்கடி, வறட்சி, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில், இலங்கை அரசை கண்டித்தும், நாட்டின் பொருளாதார சிக்கலுக்குத் தீர்வு காண தவறிய அதிபர் கோத்தபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வலியுறுத்தியும் தலைநகர் கொழும்பில் பொதுமக்கள் இன்று பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அதிபர் மாளிகை அருகில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளதால், வன்முறை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து நீர்கொழும்பு, களனி, நுகேகொட, கல்கிசை, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவின்பேரில் நேற்று இரவு 9 மணி முதல் இந்த ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும். ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பகுதிகளின் வழியே பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *