சொத்துவரியை உயர்த்தியும், பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்களையும் ஏற்படுத்தி வரும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த சொத்து வரி அதிகரிப்பால் திமுக அரசை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக சிவகாசி மாநகராட்சி பாவடித்தோப்பு திடலில் சொத்து உயர்வு கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வினை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையேற்று நடத்தி வைத்தார். மேலும் இந்த அறப்போரட்ட நிகழ்வில் முன்னாள் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச்செயலாளரும், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான M.S.R.ராஜவர்மன், கழக மகளீரணி துணைச்செயலாளரும், முன்னாள் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான M.சந்திரபிரபாமுத்தையா, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் E.M.மான்ராஜ், மாவட்ட மாணவரணிச் செயலாளர் கதிரவன் மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் வட்ட மற்றும் வார்டு கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.