ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தல்களும் தனித்தனியாக நடத்தப்பட்டு வரும் நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்படும் செலவினங்களை குறைக்க ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தலாம் என மத்திய அரசு முயற்சித்து வருகிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல மாநிலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் இதுகுறித்து பேசியுள்ள தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதனால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வந்தாலும் வரலாம். எனவே கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய பாருங்கள்” என தெரிவித்துள்ளார்.