• Mon. Jun 22nd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

பிரச்சனை ஓவர்…ஓவர் – நடிகர் வடிவேலுவின் 23-ஆம் புலிகேசி அப்டேட்

By

Aug 27, 2021 ,

நடிகர் வடிவேலுவின் 23-ஆம் புலிகேசி பார்ட்-2 திரைப்படத்தின் பிரச்சனை தீர்ந்தது.
நடிகர் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்து , 2006ம் ஆண்டு வெளியான படம் 23 ஆம் புலிகேசி. ஒரு காமெடியன் ஹீரோவாக நடித்தால், வெற்றி அடைய முடியாது என்ற கட்டமைப்பை இந்த படம் உடைத்தது. மன்னர் காலத்து ஆட்சியை இந்த படத்தில் விமர்சிப்பதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டாலும் அது பெரும்பாலும் நிகழ்காலத்தின் சூழ்நிலைக்கும் பொருத்தமாக அமைந்தது.
பிலாக் காமெடி என்ற முறையை கையாண்டு இந்த படத்தை இயக்குநர் ஷங்கர்உருவாக்கியிருந்தார். படம் முழுக்க காமெடி வசனங்கள் இடம்பெற்றாலும் , அதனுள் ஒரு ஆழமாக அரசியல் பார்வையும் விதைக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தில் வடிவேலு கூறும் வசனங்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. ’’எதிர் காலத்தில் வரும் மடையர்களுக்கு நான் எப்படி இருந்தேன் என்று தெரியவாப் போகிறது’, நீர் அடிக்கடி மங்குனி அமைச்சர் என்பதை நிருபித்து விடுகிறீர்கள் ‘’ என்ற வசனங்கள் மக்களால் அதிகமாக ரசிக்கப்பட்டன.

இந்நிலையில், இம்சை அரசன் 24-ம் புலிகேசி என படத்திற்கு பூஜை போடப்பட்ட நிலையில், நடிகர் வடிவேலு, தயாரிப்பு நிறுவனம் எஸ் பிக்சர்ஸ் இடையே பிரச்சனை நீடித்தது. இதனால் படப்பிடிப்பு நடைபெறவில்லை. வடிவேலு, எஸ் பிக்சர்ஸ் பிரச்சனை தீர்ந்தால் விரைவில் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு உள்ளது.