• Sat. Feb 15th, 2025

நடிகர் சூரி ஓப்பன் டாக் .. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

By

Aug 27, 2021 ,

தமிழ் திரையுலகில் நகைச்சுவை கதாப்பாத்திரம் மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாப்பாத்திரத்துக்கும் பெயர் பெற்றவர் ‘பரோட்டா’ சூரி. இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் “விடுதலை” திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். திரைத்துறையில் கடுமையான போராட்டங்களுக்கு பிறகு தனக்கென்று ஓர் இடத்தை பிடித்திருக்கும் சூரி இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் சூரி பிட்டாக இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களும் இன்று வைரலாகி வருகிறது. “டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு” அளித்துள்ள பேட்டியில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.பதில்: “சரியாக இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக வெற்றிமாறனிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போது அவர் என்னுடைய அடுத்தப் படத்தில் உன்னை கதாநாயகனாக ஆக்க இருக்கிறேன் என்றார்..

என்னை கதாநாயகனாக நடிக்க வைக்க பல்வேறு முயற்சிகள் கடந்த 5 ஆண்டுகளாகவே நடந்து வந்தது. பலரும் என்னை அணுகினார்கள். ஆனால் நான் அவற்றையெல்லாம் தேர்ந்தெடுக்கவில்லை. ஹீரோவாக நடிப்பது பெரிதல்ல. ஆனால் சரியான கதையாக இருக்க வேண்டும் என விரும்பினேன். வெற்றிமாறனிடமிருந்து அழைப்பு வந்த பின்பு எனக்கு வேறு யோசனையே இல்லை. உடனடியாக சம்மதித்துவிட்டேன் என தெரிவித்தார்.