• Wed. Apr 24th, 2024

ஆண்டிபட்டி அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தின விழா கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா!..

By

Aug 24, 2021

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு அருங்காட்சியகமும், தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு மையமும் இணைந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ‘சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியை நடத்தியது. இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் 89 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. முதல் பரிசினை தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி மாணவி சித்ராவுக்கும் ,இரண்டாம் பரிசை கம்பத்தைச் சேர்ந்த தேனி கம்மவார் சங்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ஹரிணி, மூன்றாம் பரிசை ஆண்டிபட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி அமுத வல்லி நாச்சியார் பெற்றனர். அவர்களுக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் ,தேனி வரலாற்று ஆய்வு மைய தலைவர் பஞ்சராஜா ஆகியோர் வழங்கினர் .மேலும் போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவ ,மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *