தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கீழ முத்தனம்பட்டி கிராமத்தில் இந்து அன்னையர் முன்னணி அமைப்பின் சார்பில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா வைபவம் நடந்தது.
விழாவையொட்டி அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயலட்சுமி தலைமையில், ஒன்றிய செயலாளர் பழனியம்மாள் முன்னிலையில்கிராம மக்கள் விரதமிருந்து, காப்புகட்டி, நேற்று மஞ்சள் குடங்களை சுமந்து கொண்டு ,மேளதாளம் முழங்க கிராம கோவில்களில் வலம்வந்து ஜக்கம்மா கோவிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது .இதனையடுத்து விநாயகர் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. விழாவில் இந்துமுன்னணி தேனி மாவட்ட செயலாளர் டாக்டர் எஸ் பி எம் செல்வம் ,மாவட்ட செயற்குழு மொக்க ராஜ்,இளைஞர் அணி அமைப்பாளர் மனோஜ்குமார் ,ஒன்றிய பொதுச் செயலாளர் ஈஸ்வரன்,ஆண்டிபட்டி நகர இளைஞரணி தலைவர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவை முன்னிட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.