• Wed. Oct 4th, 2023

நடைப்பந்தயத்தில் வெள்ளி வென்றார் பிரியங்கா -வீடியோ

ByA.Tamilselvan

Aug 6, 2022
    காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் நடைப்பந்தயத்தில்பிரியங்கா வெள்ளிப்பதக்கம்  வென்றார்.பர்மிங்காமில்  நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில்  நடைப்பந்தயத்தில்  இந்திய வீராங்கனை பிரியங்கா  கோஸ்வாமி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான 10,000 மீட்டர் நடைப்பந்தயத்தில்  அவர் 43 நிமிடம் 38.83 விநாடிகளில்  பந்தய தூரத்தை  கடந்து  2 வது இடம் பிடித்தார்.  காமன் வெல்த் போட்டிகள்  வரலாற்றில்  இப்பிரிவில்  இந்தியா வென்ற முதல் பதக்கம்  இது தான்.8ம் நாளான இன்று இதுவரை  இந்தியா மொத்தம் 27 பதக்கங்களை வென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *