மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் பெங்காலி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார்.
கன்னட திரைப்படஇயக்குனர் உபேந்திராவை திருமணம் செய்து பிரியங்கா உபேந்திராவாக பல படங்களில் நடித்தவர்.இவர் நடிக்கும் 50வது படமான டிடெக்டிவ் தீக்க்ஷனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.
படம் குறித்து பேசிய பிரியங்கா உபேந்திரா
நான் அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் வளர்ந்தேன்.
பெங்காலி திரைப்படத் துறையில் எனது வாழ்க்கையைத் தொடங்கினேன். 1999 – 2003க்கு இடைப்பட்ட குறுகிய காலத்தில் பெங்காலி, இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஒடியா படங்களில் பணியாற்றினேன்.
அந்த நேரத்தில் பெரிய நட்சத்திரங்களாக இருந்த விஜயகாந்த் , விக்ரம் , பிரபுதேவா, உபேந்திரா ஆகியோருடன் படங்களில் நடித்தேன்.
எனது முதல் திரைப்படம் பெங்காலி திரைப்படம், தேசிய விருது பெற்ற இயக்குநரான பாசு சாட்டர்ஜி இயக்கிய ஹதத் பிரிஷ்டி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்தது
எனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்தன. அந்த நேரத்தில், நான் என் நடிப்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்குவேன் என்று நினைக்கவில்லை. நான் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தேன். பின்னர், மெதுவாக மீண்டும் எனக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.
அப்போதெல்லாம் சூப்பர் ஸ்டார்களை திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்த நடிகைகள் அதிகம் இல்லை.
அப்படியே நடிக்க வந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்வது அவ்வளவு சுலபமல்ல, யாருடன் நடிப்பது?,என்ன மாதிரியான கதைகளை தெர்ந்தெடுப்பது? மற்ற ஹீரோக்களுடன் நடித்தால் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ன மாதிரியான வேடங்களில் நடிக்கலாம் போன்ற பல குழப்பங்கள் இருந்தன ஆனாலும் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தேன் .
குழந்தைகள் பிறந்த பிறகு எனக்கு 8 பெங்காலி படங்கள் கிடைத்தது
ஆனால்,குழந்தைகளை விட்டுவிட்டு என்னால் கொல்கத்தா செல்ல முடியவில்லை.
அதனால், கன்னட படங்களில் மட்டுமே நடித்தேன்பெண்களை முதன்மைபடுத்தி வரும் படங்களுக்கு மார்க்கெட் இருக்கிறது என்பது ஒரு புதிய வழியைத் திறந்து விட்டிருக்கிறது.


எனக்கு நிறைய திகில் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன,
ஆனால் திகில் தொடர்ந்து செய்யக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
பிறகு ‘இரண்டாம் பாதி’, ‘தேவகி’ ஆகிய படங்களில் நடித்தேன்.
‘டிடெக்டிவ் தீக்ஷனா” என்னுடைய 50வது படம்.ஒரு கதையை கேட்கும்போது, அதை என் குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கும் படமாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
ரசிகர்களைஒரு போதும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதிலும்,
பெண்கள் மற்றும் குழந்தைகளை ஊக்குவிக்கும் பாத்திரங்கள் மற்றும் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.
சமூக வலைதளங்களில் பல திருமணமான பெண்கள் என்னை சக்திவாய்ந்த வேடங்களில் பார்க்கும்பொழுது சக்தி வாய்ந்ததாக உணர்கிறேன் என்று என்னிடம் கூறுகிறார்கள். அதைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறேன். ‘டிடெக்டிவ் தீக்ஷனா’படத்தின் இயக்குனர் ரகு கடின உழைப்பாளி.
நான் ஏற்கனவே அவருடன் பணியாற்றியிருக்கிறேன், அவருடைய அர்ப்பணிப்பு எனக்குத் தெரியும். படத்தின் கதையை என்னிடம் சொன்னபொழுது . இதுவரை யாரும் செய்திடாத கதாபாத்திரமாக எனக்கு தோன்றியது எனவே நான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
இப்படிப்பட்ட சூப்பர் ஹீரோ ஆக்ஷன் படம் செய்ய ஃபிட்டாக இருக்க வேண்டும்.
கதாபாத்திரத்தின் உடல் மொழி, சின்ன சின்ன நுணுக்கமான விசயங்கள் கூட பார்த்து பார்த்து செய்திருக்கிறோம்.
இந்த கதாபாத்திரம் சக்திவாய்ந்த, அறிவார்ந்த, துணிச்சலான பெண்களை பிரதிபலிக்கிறது.
இது பல பெண்களுக்கு ஊக்கமளிக்கும், குறிப்பாக ஆண் ஹீரோக்களைப் பார்க்கும் பெண்கள் இப்போது பெண் சூப்பர் ஹீரோக்களை ‘டிடெக்டிவ் தீக்ஷனா”’வில் பார்க்கலாம். பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாகவும், புத்திசாலிகளாகவும், துணிச்சலானவர்களாகவும் இருக்க முடியும் என்பதையும், ஆண்களைப் போலவே குற்றங்களைத் தீர்க்க முடியும் என்பதையும் இந்தப்படம் சொல்கிறது.
‘டிடெக்டிவ் தீக்ஷனா’வை கன்னடம் , தெலுங்கு, இந்தி, தமிழ், பெங்காலி ஆகிய மொழிகளிலும் வெளியிடுகிறோம் என்றார் பிரியங்கா உபேந்திரா
- மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மதுரை […]
- சிவகாசி சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் சிறைவிருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை […]
- வாடிப்பட்டியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலைய முன்பாக வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக உயர் நீதிமன்ற […]
- திருப்புவனம் அருள்மிகு புஷ்பனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன்கோயிலில் பங்குனி உற்சவ விழாசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழாவில் 71 வது […]
- உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுகவினர் நடனமாடி, பட்டாசு […]
- மதுரையில் பெண்குழந்தை விற்பனை -மூன்று பெண்கள் சிக்கினர்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்குழந்தை விற்கப்பட்டதாக மூன்று பெண்களை பிடித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.ஆரப்பாளயத்தில் […]
- விருதுநகர் நகர் அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்றுக்கொண்டதை முன்னிட்டுவிருதுநகரில் நகர அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- சேலம் ஊமகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டுவிழாஅரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் முதல் முறையாக ஆண்டுவிழா நடைபெற்ற நிகழ்வு […]
- திருவில்லிபுத்தூரில், வனத்துறை மோப்ப நாய் உயிரிழப்பு…விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் இருந்த மோப்ப நாய், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. […]
- நத்தம் கோவில் திருவிழாவில் ஆண்கள் பங்கேற்கும் கறிவிருந்து..!நத்தம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் வருடந்தோறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய கறிவிருந்து திருவிழா […]
- அதிமுக மதுரை மாநகர் சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி- மதுரை மாநகர் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- மதுரை குருவிக்காரன் சாலையில் ஒரு சம்மர் ஸ்பாட்..!தமிழகம் முழுவதும் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்து வரும் நிலையில், மதுரையில் […]
- நெல்லையில் இருகைகளால் திருக்குறளை எழுதி அசத்திய மாணவி..!நெல்லையில் மாணவி ஒருவர் இருகைகளாலும் திருக்குறளை எழுதி சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் […]
- ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு..!பா.ஜ.க.வின் உட்கட்சிப் பூசலால், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலைக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியில் புயலை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜகவில் […]
- மதுரையில் சொகுசு காரை அடித்து நொறுக்கிய ஆறு பேர் கைது..!மதுரையில் உள்ள மதுபானக்கடை முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ஆறு பேர் கைது […]