கங்கை அமரன் இயக்கத்தில்ராமராஜன், கனகா, கவுண்டமணி,செந்தில் நடிப்பில் 1989ஆம் ஆண்டு வெளியான படம் கரகாட்டகாரன் தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டதுடன் முன்னணி கதாநாயகர்களே படத்தின் வெற்றியை பார்த்து ஆச்சர்யப்பட்டனர் ஒரு வருடகாலம் திரையரங்குகளில் ஓடிய கரகாட்டகாரன்படத்தில்” இந்த சொப்பன சுந்தரியை” இப்ப யாரு வச்சுருக்காங்க என இடம்பெற்ற வசனம்அன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத வசனமாக மாறிப்போனது அப்படிப்பட்ட வசன வரிகளில் தயாராகி இருக்கிறது ஒரு தமிழ் படம்ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‛தி கிரேட் இந்தியன் கிச்சன்’, டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன் ஆகிய மூன்று படங்கள் அடுத்தடுத்து இந்த வருடம் வெளியானது ஆனால் எந்தப்படமும் திரையரங்கில் கல்லா கட்டவில்லை இருந்தபோதிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் புதிய படங்கள் தயாராகி கொண்டு தான் உள்ளது அப்படியான ஒரு திரைப்படம்தான் சொப்பன சுந்தரி இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்கதையின் நாயகியாக நடித்துள்ளார்
படத்தில் அவருடன் லட்சுமி பிரியா, கருணாகரன், சதீஷ் உள்பட பல நடித்துள்ளனர். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க காமெடி கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் டிரெய்லரும் வெளியாக இருப்பதோடு இப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட இருக்கிறது.