போலீஸ் காவலில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்தை சந்திக்க பிரியங்கா ஆக்ரா சென்றபோது பிரியங்கா காந்தியை உத்திரபிரதேச காவல்துறையினர் கைதுசெய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள காவல் நிலைய குடோனில் 25 லட்சம் ரூபாய் திருட்டு போனது. பணம் திருட்டு போனது தொடர்பாக குடோனில் பணியாற்றி வந்த துப்புரவு தொழிலாளியை பிடித்து போலீசார் விசாரணையில் நடத்தியதில், அந்த தொழிலாளி தான் பணத்தை திருடி உள்ளது தெரியவந்தது.

இதையடுத்து 15 லட்சம் ரூபாயை மீட்டனர். மேலும் துய்மை பணியாளர்களுக்கு தீடிர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். போலீசார் தான் அடித்துக் கொன்றுவிட்டனர், என குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இறந்துபோன தூய்மை பணியாளரின் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, நேற்று மதியம் ஆக்ரா நோக்கி சென்றார். அப்போது அவரை லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையின் முதல் டோல்கேட்டில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கட்சி அலுவலகத்தைத் தவிர வேறு எந்த இடத்திற்கு சென்றாலும் தடுக்கிறார்கள். இது பொதுமக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அரசாங்கம் எதற்கு பயப்படுகிறது? என பிரியங்கா கேள்வி எழுப்பினார். காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், உரிய அனுமதி இல்லாமல் வந்ததாலும் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதாக உத்தர பிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளது.
சிறிது நேரத்தில், பிரியங்காவை தடுக்க சென்ற காவல்துறையினர், அவரிடம் செல்பி எடுத்து கொண்ட புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது. புகைப்படங்களை எடுத்து கொள்ளும் காவல்துறையினர் மீது பிரியங்கா கை போட்டு சிரித்தபடி போஸ் கொடுப்பதும் சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.