• Fri. Mar 31st, 2023

தமிழக அரசைப் பாராட்டிய ஐகோர்ட்டு நீதிபதி…

Byமதி

Oct 21, 2021

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால் பாதுகாப்பு கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கையை 12-ல் இருந்து 6 ஆக குறைத்த தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக அவருடன் 12 வாகனங்கள் செல்வது வழக்கம். ஆனால் இதனால் சில தருணங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக, அக்டோபர் 1ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட அன்று, சிவாஜி மணிமண்டபம் சென்று முதல்வர் மரியாதை செலுத்தினார். அப்போது, அவ்வழியாக சென்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் வாகனம் 25 நிமிடங்கள் நிறுத்தப்பட்டதற்க்கு நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகரை நேரில் அழைத்து தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு வாகனங்கள் குறைத்தற்க்கு நன்றி தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அதே நேரத்தில் முதலமைச்சரின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *