• Sun. Oct 13th, 2024

உத்தரகாண்டில் மழை ஓய்ந்தது – மீட்பு பணிகள் தீவிரமடைந்தது…

Byமதி

Oct 21, 2021

இந்தியாவின் பலவேறு மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் சற்றே ஓயிந்த மழை, நைனிடாலில் 24 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

நைனிடால் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை பேரிடர் மீட்புப்படையினர் வழங்கி வருகின்றனர். மலைப்பகுதிகள் நிறைந்த மாநிலம் என்பதால், மழையை தொடர்ந்து ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டது.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. உத்தரகாண்டில் தற்போது மழை ஓய்ந்துள்ளது. இதனால், மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மழை வெள்ள சேதப் பகுதிகளை உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி ஆய்வு செய்தார்.

நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கிய மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்லும் பணியில் இந்திய ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ளனர். பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் வீரர்கள் கைகோர்த்து நின்று மக்கள் கடந்து செல்ல உதவிய வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

நைனிடாவில் உள்ள கவுலா நதியில் ஆர்ப்பரித்த காட்டாற்று வெள்ளத்தால் ரயில் நிலைய தண்டவாளம் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை சீரடைய தொடங்கியிருப்பதால் நைனிடால் உள்ளிட்ட பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. எனினும், தொலைத்தொடர்பு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *