வயநாடு இடைத்தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்ட பிரியங்காகாந்தி முதல் தேர்தலிலேயே வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்கிறார்.
வயநாடு தொகுதியில் சட்டசபை தேர்தல் நடந்த போது நான் ராகுல் காந்தி அந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்பி ஆக தேர்வு செய்த பட்டார். அவர் கடந்த தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டதால் ஏதாவது ஒரு தொகுதியில் மட்டும் தான் எம்பியாக நீடிக்க முடியும் என்பதால் வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று காலை முதல் நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதல் வயநாடு தொகுதியில் தொடர்ந்து பிரியங்கா காந்தி முன்னிலை வகிக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரியங்கா காந்தி கிட்டத்தட்ட 4 லட்சம் வாக்குகள் வரை பெற்றுள்ளார். அதாவது வயநாடு தொகுதியில் மொத்தம் 9.52 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் பிரியங்கா காந்தி 4.61 பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். இதன் மூலம் போட்டியிட்ட முதல் தேர்தல் நிலையே பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றியை உறுதி செய்தார். அதன் பிறகு பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் 74,376 வாக்குகள் பெற்றுள்ளார். அதன்பிறகு சிபிஐ கட்சி வேட்பாளர் 1,40,169 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும் பிரியங்கா காந்தி தற்போது 4,68,148 வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்ததால் அவர் வயநாட்டின் எம்பி ஆகிறார்.