• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!

ByP.Thangapandi

Jun 16, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லமாபட்டி என்ற தேனி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற சோலைமலை என்ற தனியார் பேருந்தை நாகமலை புதுக்கோட்டை சேர்ந்த சின்ன கண்ணன் என்ற ஓட்டுநர் இயக்கிய நிலையில் மழையின் காரணமாக பிரேக் பிடிக்க முடியாத நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த நிலையில் இந்த விபத்தில் மேலக்காலைச் சேர்ந்த மதன், கீரிப்பட்டி சேர்ந்த ஒச்சபன், அழகாபுரியைச் சேர்ந்த ராணி மற்றும் அவரது மகள் கீர்த்திகா உள்ளிட்ட 4 பேர் படுகாயம் 13 பயணிகள் லேசான காயம் ஏற்பட்டது மற்றும் சில பயணிகள் எவ்வித காயம் இன்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உசிலம்பட்டி போலீசார் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தனியார் பேருந்து பிரேக் பிடிக்க முடியாததால் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.